Monday, December 18, 2017

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ மகளிர் திருவிழா

 ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ மகளிர் திருவிழா 

ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ மகளிர் திருவிழா அண்ணா கலையரங்கில் டிசம்பர் 10 அன்று நடைபெற்றது. ஏராளமான பெண்கள் உற்சாகத்துடன் விழாவில் பங்கேற்றனர்.

விழாவைக் காஞ்சிபுரம் சரகக் காவல்துறை துணைத் தலைவர் பி.சி.தேன்மொழி குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பி.கல்பனா, யோகா ஆசிரியர் டாக்டர் புவனேஸ்வரி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக மேடையை அலங்கரித்தனர். மூவரது கருத்துரைகளும் வாசகியருக்குத் தேவையான அறிவுக் குவியலாக இருந்தன.



யோகா ஆசிரியர் டாக்டர் புவனேஸ்வரி, எளிய யோகா பயிற்சிகள் சிலவற்றைச் செய்யக் கற்றுக் கொடுத்தார். அவரது வழிகாட்டுதலிலும் மேற்பார்வையிலும் வாசகியர் அனைவரும் யோகா செய்தனர். யோகாவின் நன்மைகள், அதன் மூலம் நோய்களில் இருந்து உடல்நலனைக் காத்தல் ஆகியவை குறித்தும் இவர் விவரித்தார்.
(நன்றி :ஹிந்து தமிழ் -17 டிசம்பர் 2017),